முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் – வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

‘வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எமது மாகாணத்தை எடுத்துக்கொண்டால் விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய இரண்டு பிரதான துறைகளிலும் மிகப் பெரியளவிலான உற்பத்திகள் காணப்படுகின்றன. ஆயினும், அந்த உற்பத்திகளைப் பதனிடும் வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் எமது மாகாணத்தில் போதுமானளவு இல்லாமையானது ஒரு பின்னடைவாக உள்ளது.

இவ்வாறான காரணங்களால் நெல் மற்றும் வெங்காயச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு உரிய விலையைப் பெறமுடியாமலும், அவற்றைச் சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான தடைகளைத் தாண்டி, எமது ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்களை அடையாளங்கண்டு, அவர்களின் உற்பத்திகளைச் சர்வதேச ஏற்றுமதிச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனம் வழங்கிவரும் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, பெண்களை வலுவூட்டுவதற்கும், அவர்களை அபிவிருத்தியில் ஒருங்கிணைப்பதற்கும் இந்தச் சம்மேளனம் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பான முயற்சிகள் சிறப்புக்குரியன.

உள்ளூர் திறன்களை வளர்த்தல், தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் மற்றும் பிராந்திய உற்பத்திகளைச் சர்வதேச ரீதியில் காட்சிப்படுத்துவதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அறிவுப் பகிர்வுச் செயற்பாடுகளின் ஊடாகவே நிலையான அபிவிருத்தியை நாம் அடைய முடியும். 

இந்த நிகழ்வில் விருதுகளை வென்றுள்ள தொழில்முயற்சியாளர்களாகிய நீங்களே எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள். நீங்கள் வெறுமனே சிறிய அளவோடு நின்றுவிடாது, எதிர்காலத்தில் நாட்டினுடைய மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.ஏ.முஹம்மட் ஹமிஸ், சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், தொழில்முயற்சியாளர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/the-norths-contribution-to-domestic-production-can-be-increased-to-more-than-10-percent—northern-governor-1781947600

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.