முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

நாட்டை அராஜகத்திலிருந்தும், இனவாதம் மற்றும் மதவாதத்திலிருந்தும் விடுவிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கம்பஹா (Gampaha) மாவட்ட முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,“ ரணில் விக்ரமசிங்க மதவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரித்த தலைவர், எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஜனாதிபதியை
வெற்றிபெறச் செய்யும் மேடையில் கைகோர்த்து வருகின்றனர்.

ரணில் வெற்றி பெற வேண்டும்

நாடு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ரணில்
விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு
முஸ்லிம் ஒருபோதும் நாடாளுமன்றம் சென்றதில்லை. இப்போது நல்ல வாய்ப்பு
கிடைத்துள்ளது.

நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Ranil Must Win To Free The Country From Anarchy

கம்பஹாவில் எமது ஜனாதிபதி தேர்தல் மேடையில்
சிங்களம், தமிழ், முஸ்லிம், நீல சிவப்பு பச்சை என அனைத்துமே உள்ளன. நாட்டை
அராஜகத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஒன்றிணைவு நடந்தது. இனவாதம் மற்றும்
மதவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

புதிய அரசியல் மேடை

இந்தப் பிரிவினையை
உருவாக்காவிட்டால் சில தலைவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. இனவாதத்தையும்
மதவாதத்தையும் இல்லாதொழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க. அதனால்தான் அனைத்து
சிங்கள, முஸ்லிம், தமிழர்களும் அவருடைய மேடையில் இருக்கிறார்கள்.

நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Ranil Must Win To Free The Country From Anarchy

இன்று எமக்கு
புதிய அரசியல் மேடை கிடைத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில்
அனுரகுமாரவின் உரையை கேட்ட முஸ்லிம்கள் அவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்.

எனவே சந்தர்ப்பவாத அரசியலை நிராகரிப்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்ல
சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.