முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் வடக்கு ஆளுநரால் அதிரடியாகப் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் இதற்கான உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளினதும் நடத்தை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்திருந்தார்.

அதன்படி, குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் இறுதி அறிக்கை மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இவர்கள் இருவரும் பதவிகளில் இருந்தும், உறுப்பினர் நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரது பதவி நீக்கம் தொடர்பான ஆளுநரின் விசேட கட்டளைகள் அடங்கிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி வவுனியா மாநகரசபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்கப்படுகிறார் என வர்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1947ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் இணைந்து வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 576) பிரிவு 277(1) இன் (ஏ) மற்றும் (டீ) உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் படி மேயராகத் தொடரத் தகுதியற்றவர் என நான் திருப்தியடைந்துள்ளேன். 

எனவே, 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277(1) பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை வடக்கு மாகாண உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/vavuniya-mayor-and-chavakachcheri-deputy-commissioner-abruptly-removed-from-office-by-northern-governor-1782315646

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.