அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதாவது, செப்டம்பர் 15 ஆம் திகதி (காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை) கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கை
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
மேலும், 3,23,879 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.