இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஒன்று அமெரிக்கா செல்ல உள்ளது.
குறித்த குழு எதிர்வரும் வாரம் அமெரிக்க செல்ல உள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்தும் அதிரித்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
மக்களுக்கான அபாயாம்
அதன்போது, இலங்கைக்கு 44 வீத வரி விதிக்கப்பட்டதுடன், அதனால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைகள் பறிபோகும் அபாயாம் இருப்பதாகவும் தெரிக்கப்பட்டது.

தற்போது, ஒவ்வொரு நாட்டிற்கும் அறிவிக்கப்பட்ட வரி கட்டணங்களை செயல்படுத்துவதில் 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் கலந்துரைடல்
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்கு இன்னும் தாமதம் ஏற்படவில்லை என அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் பிரதிநிதிகள் குழு அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

