ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் (Imthiaz Bakeer Markar) தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் உட்பூசல்
“தவிசாளர் பதவியிலிருந்து விலகினாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்தில் கொண்டே அவர் பதவி விலகல் செய்துள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
https://www.youtube.com/embed/XH0TveCN_ic

