இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) திருகோணமலை (Trincomalee) சம்பூர் பகுதிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை இன்று (03.04.2024) மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது, சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திற்கான இடத்தையும் பார்வையிட்டுள்ளார்.
குறித்த காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினை இந்திய அரசாங்கத்துடன் இலங்கை மின்சார சபை (CEB) இணைந்து மேற்கொள்கின்றது.

விசேட சந்திப்பு
அதேவேளை, நேற்றையதினம், இந்திய உயர்ஸ்தானிகர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு (Batticaloa) வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதனையடுத்து, கிழக்குப் பல்கலைக்கழக (Eastern University) நிருவாகத்தினருடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – நிலவன்
Source: https://tamilwin.com/article/indian-high-commissioner-visited-sampur-region-1714743908

