முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸை வெட்டிய சந்தேகநபர் தப்பியோட்டம்

காலி – எல்பிட்டிய பகுதியில் கைது செய்யப்படவிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, ​​சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதால், பொலிஸார் வானத்தை நோக்கிச்சுட்டுள்ளனர்.

இதன்பின்னர், இரண்டு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதன்போது இரண்டு அதிகாரிகள் அவர்களை துரத்திச்சென்ற நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர், ஒரு பொலிஸ் அதிகாரியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். 

இதனால், சந்தேக நபர்களில் ஒருவரின் கையில் குண்டு பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்குள்ளான சந்தேகநபருக்கு விலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் சந்தேகநபரை மீட்டுக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.  

குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றிற்கு ஆதவளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/shooting-in-elpitiya-suspect-who-attacked-police-escapes-1782880435

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்