முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை! – மரணங்கள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், மேல் மாகாணத்திலுள்ள பல வைத்தியசாலைகள் தங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவது வைத்தியசாலைகள் மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்குப் போதுமான சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகி வருவதாகவும் வைத்தியர் கபில கன்னங்கரா குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், டெங்கு தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டில் பதிவாகியுள்ள மொத்தம் 59,638 டெங்கு நோயாளிகளில் 52.4 சதவீதத்தினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள 22 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

அதேநேரம், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய மூன்று கட்ட உத்தி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நோய்ப்பரவல் ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளதாலும், பல வைத்தியசாலைகள் முழு கொள்ளளவிலும் இயங்கி சுகாதாரக் கட்டமைப்பின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாலும், அவசரக்கால குறுகிய கால நடவடிக்கைகளுக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். 

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 7500 பேர் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/tough-situation-in-the-northern-province-hospitals—warning-that-deaths-could-increase-1783316356

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.