திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் நேற்றிரவு (19) உட்புகுந்த காட்டு யானையொன்றை வயல் நிலங்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது.
இதனால் பல விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன.
அத்தோடு குறித்த யானை வீதியால் பயணித்த காட்சி CCTV கமராவிலும் பதிவாகி அச்சித்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக இரவு வேளைகளில் காட்டு யானைகள் உட்புகுந்து வயல் நிலங்களுக்கு சேதம் விளைவிப்பதால் தாம் பொருளாதார நஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
Source: https://samugammedia.com/wild-elephants-are-rampaging-in-trincomalee-1787211275

