தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப் போகின்றார்கள், அவரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சிக்கு இல்லையென இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – பாலையடிவட்டையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பயந்து ஓடிய தலைவர்கள்
இந்த நாட்டில் பிரச்சினைகள் வந்தபோது நாடு பற்றி எரிந்த போது அதைக் கண்டு பயந்து ஓடிய தலைவர்கள் மீண்டும் ஒருமுறை வந்தால் இந்த நாடு என்னவாகும் தலைவர்கள் என்றால் சவால்கள் வருகின்றபோது அதனை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அதை இந்த ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் செய்தார் என்றும் பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நீண்ட வரலாற்றைக் கொண்ட தமது இனம் இடையிலே புகுந்த குறுக்குப் புக்திகள் பிடித்தவர்கள் செய்த பணிகள் காரணமாக நாங்கள் அறுந்து போய் கிடக்கின்றோம் அதனை இன்னும் எம் மத்தியில் கொண்டு வந்து திணிக்க முனைகின்றார்கள்.
தமிழரசு கட்சிக்காரர்கள்
சாணக்கியன் சிறுபிள்ளை அவருக்கு கண் பிதுங்குகின்றது அதிகம் வியர்க்கிறது வந்தோம் மீண்டும் தோல்வியடைய போகின்றோம் என்பதை அவருக்கு தெரிந்து விட்டது.
சாணக்கியனுக்கு நம்பிக்கை இருந்தால் சஜித் பிரேமதாசவின் மட்டு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ஏறி ஆணைதாரங்கள் என்று கேட்டிருக்க வேண்டும்.
எனவே தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப் போகின்றார்கள். அவரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு எனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இல்லை. நாங்கள் எங்களுடைய பணியை செய்வோம்” என்றார்.