19 வயதிற்கு உட்பட்ட தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடித்து கடந்த போட்டிகளில் இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவி விமோக்சா பாலசூரியவிற்கு பாராட்டு வைபவமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை சிங்கள மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று 08.10.2024 குறித்த பாராட்டு வைபவம் நடைபெற்றுள்ளது.
விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம விருந்தினராக பங்கேற்று வீராங்கனையை வாழ்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்துள்ளார்.
கிரிக்கட் அணி
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “நினைத்துப் பார்க்க முடியாத சிலவற்றை நாம் இப்பொது நடத்தி காட்டியிருக்கிறோம்.
அது போல முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.
திருகோணமலையில் இருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் தொடர்ச்சியாக முயற்சி செய்தால் அதனை நிச்சயம் வென்று காட்ட முடியும்” என அவர் தெரிவித்தார்.