இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை ஒருங்கிணைந்த நிதியத்துக்கு ரூபா 5 பில்லியனை வழங்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
ஈட்டப்பட்டுள்ள இலாபம்
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை 2024 வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்துக்கு வழங்கிய தொகை ரூபா 10.3 பில்லியன் மட்டுமே.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் மூலம், இலங்கை துறைமுக அதிகாரசபை 31.10.2025 நிலவரப்படி வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூபா 39 பில்லியனைப் பெற்றது.
இது முந்தைய ஆண்டை விட வரிக்குப் பிந்தைய நிகர இலாபத்தில் சுமார் ரூபா 12 பில்லியனின் அதிகரிப்பாகும்.
செப்டெம்பர் 2025இல் ஒருங்கிணைந்த நிதிக்கு ரூபா 2 பில்லியன் வழங்கப்பட்டது, மேலும் டிசம்பர் 2025இல் மேலும் ரூபா 3 பில்லியனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

