தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு கனடா உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
இரங்கல் பதிவு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் கனடா உயர்ஸ்தானிகராலயம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் நிலைமையை மேம்படுத்த அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு பொது சேவையாளர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரா. சம்பந்தனின் மறைவுக்கு இலங்கை உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/high-commission-canada-condolences-to-sampanthan-1719837477

