முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம் – அமைச்சர் நளிந்த விளக்கம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதற்காக உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையால் உருவாகக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலைமை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் எந்தவித தடையுமின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது டீசல் நுகர்வு 11 சதவீதமும், பெற்றோல் நுகர்வு 9 சதவீதமும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், உலகளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் இடம்பெற்றாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக தெரிவித்தார்.

இதனால், நாட்டிற்கு எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/to-avoid-fuel-shortages-we-might-have-to-miss-out-on-low-price-deals–ministers-brief-explanation-1784174179

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.