முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மரணம்: முறைப்படி விசாரணை இடம்பெறுகின்றது! – அமைச்சர் நளிந்த விளக்கம்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இது குறித்து எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தை அரசு அலட்சியப்படுத்தவில்லை; முறையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் அச்சப்படத் தேவையில்லை. இச்சம்பவத்தை அரசியலாக்குவது முறையற்றது.

சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சாட்சியாளர்கள் உயிரிழப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர், தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஊடகச் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணத்தில் பாரிய சந்தேகம் காணப்படுவதால், இது குறித்து அரசாங்கம் உடனடியாக முறையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார். 

கடந்த காலங்களில் முக்கிய வழக்குகள் தொடர்பில் சாட்சியமளித்த கபில சந்திரசேன போன்ற நபர்கள் தற்கொலை என்ற முத்திரையின் கீழ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் சி.டி விக்ரமரத்னவின் மரணமும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மினின் மரபணு (டி.என்.ஏ.) அறிக்கைகளை போலித் தயாரிப்பு செய்யுமாறு அப்போதைய ஆட்சியின் உயர் பதவியில் இருந்த ஒருவரால் தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக சி.டி விக்ரமரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மிகத் தீர்மானமிக்க சாட்சியமொன்றை வழங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

அவர் சாட்சியமளித்து சில தினங்களிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதானது, முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்களை திட்டமிட்டு அகற்றும் சதித்திட்டமோ என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சாட்சியாளர்களை அச்சுறுத்தவும், சான்றுகளை மூடிமறைக்கவும் நிழல் அரசாங்கம் முயல்கின்றதா என ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Source: https://samugammedia.com/former-police-chiefs-death-investigation-is-underway-properly—ministers-brief-explanation-1784437835

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.