முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி – டொலரும் எகிறியது

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாவால் அதிகரித்து 380,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு சந்தையிலும் தங்க விலைகள் தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாக நகை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.04 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், நேற்று (21) அது 340.94 ரூபாவாக காணப்பட்டது.

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளின் தாக்கத்தால் நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source: https://samugammedia.com/shock-for-those-waiting-to-buy-gold—the-dollar-soared-1784705162

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்