முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கும் யானைகள் – மட்டு. மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யானை வேலிகள் சேதப்படுத்தப்பட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால், மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், இன்று பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் அமைக்கப்பட்டு, யானைகளை விரட்டும் தற்காலிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு 6.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தேவையற்ற வெளிச்செல்லல்களை தவிர்க்குமாறும், யானைகள் தென்பட்டால் அவற்றிற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், டோர்ச் விளக்கு, பட்டாசு உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, குறித்த யானைகளை மாவட்ட எல்லையை கடந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உறுதியளித்துள்ளார்.

Source: https://samugammedia.com/elephants-raiding-residential-areas—mattoo-urgent-warning-to-the-public-1784789178

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.