முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா செல்ல முயன்ற 13 பேர் திருப்பி அனுப்பப்பட்டு காங்கேசன்துறையில் கைது

கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்ற குறித்த 13 பேர் தொடர்பில் இந்திய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, அவர்களை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்ப இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கைக்கு திரும்பிய 13 பேரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கருங்கொடித்தீவு, மாம்பிட்டி, மதவாச்சி, ஹல்தும்முல்லை, வெல்லவாய, மொணராகலை, மாவடிச்சேனை, பலாங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 13 பேரிடமும் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் இன்று திங்கட்கிழமை (07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Source: https://samugammedia.com/13-people-who-tried-to-go-to-india-were-sent-back-and-arrested-in-kangeyam-1788754895

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்