முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம்; தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் – மனோ கணேசன் முழக்கம்

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது தேசிய மாநாடு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.  

அங்கு கலந்துகொண்ட அவர்  மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக முக்கியமாகும். 

அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை.

அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச் சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.

எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. ஆனால், அரசை நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச் செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை.

அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசி வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.

சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத்  தோற்கடிப்போம் என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம்.  – என்றார். 

Source: https://samugammedia.com/lets-fear-the-red-bull-the-government-will-be-defeated-right-in-the-election-field—manu-ganesans-roar-1788754747

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.