முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லொறிக்கு கீழே சிக்கி தாய் பலி; இரு புதல்வர்கள் காயம்

சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான டி. எம். திலானி அரோஷா (46 வயது) ஆவார்.

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

மூத்த மகனின் தோசத்துக்குச் செய்யவேண்டிய நேர்த்தியை நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் பிற பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/76-380458

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.