முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில்
வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக
நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப்
பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர்
தெரிவித்தார்.

01 முதல் 06 வரையிலான அமர்வுகள்

பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா
தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா | South Eastern University Convocation

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்
எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்
உபவேந்தரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் தொடக்க
உரையாற்றினார்.

திங்கட்கிழமை (27) இறுதி நாளில் 07, 08 மற்றும் 09 ஆகிய அமர்வுகளில் மொத்தம்
1,010 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் 07 ஆவது அமர்வில்
வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 08 ஆவது அமர்வில்
அதே பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளும், 09 ஆவது அமர்வில் 264 வெளிவாரிப்
பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதற்கு முன்னர் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 01 முதல் 06 வரையிலான
அமர்வுகளில் மொத்தம் 2,388 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றிருந்தனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற

முதல் நாளான சனிக்கிழமை (25) நடைபெற்ற 01 ஆவது அமர்வில் பொறியியல் பீடத்தைச்
சேர்ந்த 187 பட்டதாரிகளுக்கும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 285
பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா | South Eastern University Convocation

தொடரந்து நடைபெற்ற 02 ஆவது
அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 368
பட்டதாரிகளும், 03 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 414 பட்டதாரிகளும்
பட்டங்களைப் பெற்றனர்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற 04 ஆவது அமர்வில் பிரயோக
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 418 பட்டதாரிகளுக்கும், 05 ஆவது அமர்வில் கலை
கலாசார பீடத்தைச் சேர்ந்த 373 பட்டதாரிகளுக்கும், 06 ஆவது அமர்வில் அதே
பீடத்தைச் சேர்ந்த 343 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த 09 அமர்வுகளின் ஊடாக 3,134 உள்வாரிப்
பட்டதாரிகளும், 264 வெளிவாரிப் பட்டதாரிகளுமாக மொத்தம் 3,398 பேர் பட்டங்களைச்
சூடிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/south-eastern-university-convocation-1785229428

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.