நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் இன்று (12) காலை ஒரு பவுண் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
சந்தை நிலவரம்..
நேற்றைய தினம் இதன் விலை 343,200 ரூபாவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 373,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 375,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த விலைகள் அடிக்கடி மாறுபடக்கூடியவை என்பதால், கொள்முதல் செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376

