லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு, ப்ளேன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உணவகங்களில் தற்போது விற்கப்படும் விலையிலிருந்து 5 ரூபா குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளேன் தேநீரின் தற்போதைய விலை: 40 – 50 ரூபாவாகவும், பால் தேநீரின் தற்போதைய விலை: 100 – 120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

தேநீருக்கென தனியாகக் கட்டுப்பாட்டு விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், உணவகங்களில் விற்கப்படும் தற்போதைய விலையிலிருந்து 5 ரூபாவைக் குறைக்குமாறு அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் உணவு மூலப்பொருட்களின் விலைகள் குறையுமாயின், உணவக உணவுகளின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
Source: https://tamilwin.com/article/tea-price-increased-1788750081

