உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை ஆயிரத்து 387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் ஆயிரத்து 293 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 86 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளில் ஆயிரத்து 387 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 173 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.