முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஸ்வெசும நிதி மோசடி: நோர்வுட் பிரதேச செயலகத்தின் இரு பெண் அதிகாரிகள் கைது

நாட்டில் அதிகளவான அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நோர்வுட் பிரதேச செயலகத்தில், பயனாளிகளுக்கான சுமார் 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுகளை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01) கைது செய்யப்பட்ட குறித்த இரு அதிகாரிகளும், ஹற்றன் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நோர்வுட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹற்றன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த பெண் அதிகாரி எனவும், மற்றையவர் அதே பிரிவில் பணியாற்றிய மற்றொரு பெண் அதிகாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை சந்தேகநபர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் நோர்வுட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டு நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனுக்கு அனுப்பப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்றின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களான இரு அதிகாரிகளும் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், நுவரெலியா மாவட்ட செயலக கணக்காய்வு பிரிவு மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அஸ்வெசும பிரிவின் அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், மேலும் மூன்று அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்துவதற்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அஸ்வெசும மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகளில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/asweshum-financial-scam-two-female-officers-from-norwood-regional-office-arrested-1785655651

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.