முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் ‘TM App’ இணைப்பு! – மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட ‘TM App’ செயலி, இலங்கை மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் தற்போது ‘TM App’ செயலியும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் Qnet/Questnet, MTFE, OnmaxDT, Fruugo Online, Beecoin App, Windex Trading, Smart Win Entrepreneur, Infinity Rover (Pvt) Ltd உள்ளிட்ட மொத்தம் 26 நிறுவனங்கள் மற்றும் செயலிகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்கள் அல்லது நடைமுறைக்கு சாத்தியமற்ற அளவிலான அதிக இலாபத்தை உறுதியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், அவ்வாறான முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/tm-app-link-appears-in-the-list-of-banned-pyramid-schemes-in-sri-lanka–central-bank-warning-1785990278

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.