முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தோட்டத் தொழிலாளர்களை விரட்டிய குளவிகள் – ஒருவர் பலி! பலர் வைத்தியசாலையில்

தலவாக்கலை – லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தில் தேயிலைத் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்கியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (21) திங்கட்கிழமை காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சீரற்ற காலநிலை காரணமாக குளவிக் கூடு கலைந்ததைத் தொடர்ந்து, குளவிகள் தொழிலாளர்களைத் தாக்கியதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்கான 71 வயதான சுப்பிரமணியம் தாமோதரம் என்ற தொழிலாளர் உள்ளிட்ட பலர் உடனடியாக லிந்துலை பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த முதியவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மேலும் ஏழு பேர் லிந்துலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் மேலும் மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த தொழிலாளரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/thugs-who-chased-out-the-plantation-workers—one-dead-many-in-the-hospital-1789988283

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்