முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: விசாரணை அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு!

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இரத்தக் களரியான வன்முறைச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இத்தகவலைப் பகிரங்கப்படுத்தினார்.

கடந்த மாதம் 5 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதலில் 22 கைதிகள் மற்றும் 10 சிறை அதிகாரிகள் உட்பட 32 பேர் கொடூரமாக உயிரிழந்ததுடன், 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் படுகாயமடைந்ததாக அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்தார்.

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான அரச நிர்வாகச் சுற்றறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து ஆராய ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் மூலமாக:பாதிக்கப் பட்ட அதிகாரிகளுக்கான கூடுதல் இழப்பீடுகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் அவர்கள் பெற்ற கடன்களுக்கான நிவாரணங்கள்,நிரந்தர ஊனமுற்ற மற்றும் தீவிர காயமடைந்த அதிகாரிகளுக்கான எதிர்கால நலன்புரி நடவடிக்கைகள்

தொடர்பான முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெளிவுபடுத்தினார்.

Source: https://samugammedia.com/negombo-prison-violence-inquiry-report-handed-over-to-president-anura-1786029615

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்