முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரத்தக்களரியான இலங்கை சிறைகள்; பலி எண்ணிக்கை உயர்வு! கூரை மீது ஏறி போராட்டம்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து பொதியொன்று வீசப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டது.

சம்பவத்தை தொடர்ந்து நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் சுமார் 40 கைதிகள் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.கைதிகள் குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச தேவையான பலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கைதிகள் குழுவொன்றுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும், இதன்போது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நீர்கொழும்பு – பள்ளஞ்சேனை திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் இன்று முற்பகல் கலவர நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள சில கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பள்ளஞ்சேனை திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/bloody-sri-lankan-prisons-rising-death-toll-climbing-onto-the-roof-in-protest-1786084005

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.