முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு பரவல்: 88,000 கடந்தது பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு!

நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 88,522 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 21,533 ஆகவும், ஜூலை மாதத்தில் 29,973 ஆகவும் இருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டுமே 3,175 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் டெங்கு பரவலின் வேகம் அதிகரித்திருப்பது உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 63 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், மரண வீதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தப் பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் (52.96% / 46,885 பேர்) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.

மாவட்டங்களின் அடிப்படையில்: கம்பஹா: 18,832 நோயாளர்கள் ,கொழும்பு: 17,568 நோயாளர்கள்,கண்டி: 6,228 நோயாளர்கள்.

பொதுமக்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, கொசுக்கள் பெருகுவதைத் தடுக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/rising-dengue-outbreak-in-sri-lanka-infections-exceed-88000-63-deaths-1786114967

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்