முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

“இந்திய நிதி முடக்கம்: வடக்கின் அபிவிருத்தியும் பாதுகாப்பும் கேள்விக்குறி-அஜித் பி. பெரேரா சாடல்!”

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிதியை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா,அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா, நாட்டின் எதிர்கால அமைதி மற்றும் வட பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

நாட்டில் மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாவதைத் தடுப்பதே தற்போதைய முதன்மையான தேவையாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள் ஆகிய மூவின மக்களும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாநில மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றைத் தரமுயர்த்துவதற்காக இந்தியா நிதியுதவிகளை வழங்கிய போதிலும், அவை இன்னும் பயன்பாட்டிற்கு வரமால் முடங்கியுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த ஒப்பந்தங்களை வலுப்படுத்தி திட்டங்களை விரைவாக அமுல்படுத்த அரசாங்கம் வைத்துள்ள வேலைத்திட்டம் என்ன? வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகாமல் தடுக்கவும் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

இந்திய நிதியைப் பயன்படுத்தி வடக்கின் முக்கிய போக்குவரத்து மையங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதன் மூலமே அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/freezing-of-indian-funds-development-and-security-of-the-north-in-jeopardy–ajith-p-perera-slams-move-1786206019

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.