முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதக நிலை!

இலங்கையின் நீண்டகால அந்நியச் செலாவணி கடன் தரவரிசையை ‘CCC+’ என்பதில் இருந்து ‘B-‘ ஆக சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனமான ‘ஃபிட்ச்’ இன்று(22.9.2026) உயர்த்தி அறிவித்துள்ளது.

மேலும், இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை ‘உறுதியானது’ எனத் தக்கவைத்துள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், வெளிப்புற நிதி அபாயங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்கும் வலிமையை இலங்கை பெற்றுள்ளதாகவும் ஃபிட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் நிலைமை

எனினும், இலங்கையின் கடன் நிலைமை குறித்து ஃபிட்ச் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதக நிலை! | Fitch Upgrades Sri Lanka S Rating To B

இலங்கையின் கடன் அளவு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் விகிதங்கள் இன்னமும் உயர் மட்டத்திலேயே நீடிப்பதாகவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிதமான அளவிலேயே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் தேவைகளுக்கு முழுமையாக இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கைக்கு, அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலால் உயர்ந்து வரும் சர்வதேச எரிபொருள் விலைகள் புதிய சவாலாக அமைந்துள்ளன.

பொருளாதார வளர்ச்சி 

 இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக உபரியாக இருந்த இலங்கையின் நடப்புக் கணக்கு, 2026-ஆம் ஆண்டில் பற்றாக்குறையைச் சந்திக்கக்கூடும் என கணி்க்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதக நிலை! | Fitch Upgrades Sri Lanka S Rating To B

எனினும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணப்பரிமாற்றம் சீராக அதிகரித்து வருவது இந்த அழுத்தத்தைச் சமாளிக்க உதவுகிறது.

சவால்கள் நிலவியபோதிலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மீள்தன்மையுடன் வலுவாக இருந்து வருவதாகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் நிதி உதவிகள் தற்காலிகப் பொருளாதார நெரிசல்களைச் சமாளிக்க உறுதுணையாக இருக்கும் என்றும் ஃபிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/fitch-upgrades-sri-lanka-s-rating-to-b-1790063413

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.