உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சை செப்டம்பர் 05 வரை நடைபெற உள்ளது.
பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வருமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த முறை 372,310 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர்.
இதில் 264,496 பாடசாலை மாணவர்களும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இந்தப் பீட்சை நாடு முழுவதும் 2,532 மையங்களில் நடைபெற உள்ளது.
பரீட்சை நிலையங்களில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
Source: https://ibctamil.com/article/all-set-for-advanced-level-exam-1786293543

