முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நடனம் (தேசிய மற்றும் பரதநாட்டியம்), சங்கீதம் (கீழத்தேய, கர்நாடக மற்றும் மேற்கத்திய) மற்றும் நாடகம் மற்றும் அரங்கியல் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

செயல்முறை பரீட்சை

பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரையும், மனைப் பொருளியல் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் ஒக்டோபர் 20ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Gce Al Practical Examination Schedule Announced

அதேவேளை, உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

அனுமதி அட்டைகள்

செயல்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டை

தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Gce Al Practical Examination Schedule Announced

மேலும், செயல்முறைப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர், பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து தங்களுக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு

பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்கு 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112785922, 0112784537, 0112786616 மற்றும் 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ள முடியும்.

மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் விசாரணைகளை முன்வைக்க முடியும்.

Source: https://tamilwin.com/article/gce-al-practical-examination-schedule-announced-1789977589

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.