தனது விடுதலையின்போது இஸ்ரேலிய(israel) பிணைக்கைதி ஒருவர் தனக்கு அருகில் நின்ற ஹமாஸ்(hamas) உறுப்பினர்கள் இருவரது நெற்றியில் முத்தமிடும் காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.
நேற்று (பெப்.22) ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டு பிணைக் கைதியாக இருந்த இஸ்ரேலியர்களான ஒமர் வென்கெர்ட், ஒமர் ஷெம் டோவ் மற்றும் இலியா கோஹன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஹமாஸ் உறுப்பினர்களுக்கு முத்தம்
இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படையினரால் அழைத்து வரப்பட்ட அவர்கள் மூவருக்கும் அவர்களது விடுதலை சான்றிதழ்கள் வழங்கப்பட அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலையடைந்த பிணைக் கைதிகளில் ஒருவரான ஒமர் ஷெம் டோவ் என்பவர் அவரது அருகில் முகமூடி அணிந்து கையில் துப்பாக்கி ஏந்தியிருந்த ஹமாஸ் உறுப்பினர் இருவரது நெற்றியிலும் முத்தமிட்டார்.
வைரலாகும் காணொளி
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் ஆராவாரத்துடன் கூச்சலிட்டனர். இந்த முழு சம்பவமும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து, ஒமரின் உறவினர்கள் கூறியதாவது, எல்லோரிடமும் நட்போடு பழகுவது அவரது இயல்பு என்றும் ஹமாஸ் படையினர் உள்பட அனைவராலும் அவர் நேசிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தனர்.
https://www.youtube.com/embed/ptmcALXZJnk