கூலி
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கூலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 14ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தது.
சீரியல் நடிகை அக்ஷயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் பாருங்க
வசூல்
என்னதான் விமர்சனங்கள் மோசமாக இருந்தாலும், வசூலில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 15 நாட்களை வெற்றிகரமாக காத்திருக்கும் கூலி இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 15 நாட்களில் உலகளவில் ரூ. 502 கோடி வசூல் செய்துள்ளது. இது ரஜினிகாந்தின் மூன்றாவது ரூ. 500 கோடி வசூல் செய்த திரைப்படமாகும்.