மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய ந நபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
Source: https://samugammedia.com/underworld-rivalry-woman-killed-in-shooting-at-mitteniya-1786544383

