முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு – விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம்

உள்நாட்டுத் தேவையை விட அதிகமான அளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால், சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாகனங்களை வாங்குவதற்கு இந்த சந்தை நிலைமை மிகவும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்கள் இறக்குமதி

அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு உள்நாட்டுத் தேவை குறைவாகவே இருந்த போதிலும், அந்த தேவையை விட மிக அதிக அளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் சந்தையில் வாகனங்களின் உபரி நிலை (தேவைக்கு அதிகமான இருப்பு) ஏற்பட்டுள்ளது.

முன்பு நிலவிய அதிக விலைகள் மற்றும் தற்போதைய உபரி நிலை ஆகியவற்றின் காரணமாக வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக பல இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களை நஷ்டத்திற்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான அறிவிப்பு - விலையில் இலட்சக்கணக்கில் ஏற்படும் மாற்றம் | Vehicle Price In Sri Lanka

விலை குறைவு

தற்போது, ​​உள்ளூர் சந்தையில் Yaris, Vezel, Raize, Wagon R, Daihatsu Mira மற்றும் Suzuki போன்ற பிரபலமான வாகன மாடல்கள் அனைத்தின் விலைகளும் 300,000 முதல் 400,000 ரூபா வரை குறைந்துள்ளன.

சில வாகனங்களின் விலைகள் சுமார் 1 மில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளன. எதிர்வரும் காலங்களில் விலைகள் இன்னும் குறையக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/vehicle-price-in-sri-lanka-1790311497

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.