முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொனால்ட் ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ செயலி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் ‘Truth API’
எனும் புதிய சேவைக்கு எதிராக நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.

‘தி இன்டர்செப்ட்’ (The Intercept) மற்றும் ‘ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ்
ஃபவுண்டேஷன்’ (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக
அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.

 ட்ரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம்
வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம், சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும்
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின்

இது “மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது”
என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ‘ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப்’ (TMTG),
ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் “இடதுசாரி செயற்பாட்டாளர்கள்”
நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா
செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ
விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Source: https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்