வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன்தினேஸ் கருணாணாயக்கதனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாணசிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்தஎச்.பி. சிறிவர்தன, இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தினேஸ் கருணாணாயக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

