புதிய இணைப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கும் சிறப்பு நேரலை உங்கள் IBC- தமிழ் தொலைக்காட்சி, லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஆகிய இணையத்தளங்களில் ஆரம்பமாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளானது இன்றைய தினம் (21) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு நிறைவடைந்தது.
முடிவடைந்த தேர்தல் தொடர்பில் மக்களிடையே பாரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஆர்வமான சூழல் உருவாகியுள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம் அத்தோடு உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம்,
முதலாம் இணைப்பு
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது நாடளாவிய ரீதியில் சூடுபிடித்துள்ளது.
38 வேட்பாளர் களமிறங்கியுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது இன்று (21) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை நான்கு மணிக்கு நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் தொடர்பான முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கும் சிறப்பு நேரலை உங்கள் IBC- தமிழ் தொலைக்காட்சி, லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஆகிய இணையத்தளங்களில் ஒளிபரப்பாகவுள்ளது.
சிறப்பு நேரலை
16 மணிநேர இடைவிடாத குறித்த ஒளிப்பரப்பானது இன்று மாலை (இலங்கை நேரம்) ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனடிப்படையில், இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் கலையகங்களில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சிறப்பு நேரலையோடு நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.
மேலும், தேர்தல் ஆரம்பமாகிய கட்டம் முதல் இறுதி முடிவுகள் வரை உடனுக்குடன் தாமதமின்றி செய்திகளை தெரிந்துகொள்ள கீழுள்ள ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
- IBC Website – https://ibctamil.com/
- whatsapp Announcement – https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF
- whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u

https://www.youtube.com/embed/A7ViMoAC97w
Source: https://ibctamil.com/article/presidential-election-live-24-hours-1726891889

