முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு, கம்பஹாவின் குடிநீரில் ஆபத்து – திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலில் இரசாயனம் ஒன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் விநியோகத்தில் எத்தகைய மாசுபடுத்தும் பொருட்களும் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹாவின் குடிநீரில் ஆபத்து - திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம் | Reason Behind Water Supply Disruption In Colombo

இச்சம்பவம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அத்துடன், உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

Source: https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்