கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை அடுத்த ஆண்டு மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) காரணமாக இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அன்று 15 ஆவது ஆண்டு உணவு விலை அறிக்கையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுமையான முறை
அதில் புதுமையான முறையில் ஆய்வாளர்கள் தங்கள் கணிப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில், நான்கு பேர் கொண்ட கனேடிய குடும்பம் ஒன்று 2025 ல் உணவுக்காக $16,833.67 செலவழிக்க நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 801 டொலர்கள் அதிகமாகும் அத்தோடு பரவலான பணவீக்கம் காரணமாக கனேடியர்கள் ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று நாட்கள் தொடங்கி உணவு பண்டங்களின் விலையும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது.
இறைச்சி விலைகள் 2025 இல் நான்கு முதல் ஆறு சதவீதம் வரை உயரலாம் அத்தோடு மேற்கில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் விளைவாக, கால்நடை உற்பத்தியாளர்கள் தங்கள் மந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க, மாட்டிறைச்சியின் விலையும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.
காய்கறி விலைகள்
அத்தோடு, கனேடிய டொலரின் மதிப்பு சரிவடைந்ததன் காரணமாக காய்கறி விலைகள் வேறு சில வகைகளை விட வேகமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது 2025 இல் கனேடிய உணவு இறக்குமதியாளர்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளைப் போலவே, காலநிலை மாற்றம் உணவு விலையில் ஒரு காரணியாக தொடர்கிறது மேலும், தீவிரமான வானிலை பயிர்களை வளர்ப்பது மற்றும் கால்நடைகளை வளர்ப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது.
அத்தோடு, பிறக்கும் புத்தாண்டில் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் டொனாட்ல்ட் ட்ரம்பால், அவர் எடுக்கவிருக்கும் முடிவால் கனேடிய மக்களுக்கான உணவு விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 போலவே, தற்போதும் காலநிலை மாற்றம் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் காரணமாக கனேடிய மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.