முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதியவரைக் பலிகொண்ட பாதாள உலகக் குழு மோதல் – பொலிஸார் பரபரப்புத் தகவல்

கொழும்பு, பொரலஸ்கமுவை – மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் ‘தெஹிவளை சாண்டோ’ என்பவரால், ‘கொஸ்மல்லி’ எனப்படும் நபரின் காசாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு தவறியதையடுத்து, குறித்த காசாளரின் தந்தையான சுனில் பெர்னாண்டோ என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய சுனில் பெர்னாண்டோ, சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/underground-gang-clash-kills-elderly-man—police-report-shocking-news-1788602532

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்