இலங்கையை (Sri lanka) பொறுத்தவரையில் பாதுகாப்பு விவகாரங்கள் பிரதானமான விடயமாக பேசப்படுகின்றது.
கடந்த காலங்களில் அமெரிக்காவின் (USA) பாதுகாப்பு விவகாரங்கள் இலங்கையில் கையாளப்பட்டன.
அதிலும் குறிப்பாக அமெரிக்க புலனாய்வு கட்டமைப்பு இலங்கை புலனாய்வுக்கட்டமைப்புடன் இணைந்து சில வேலைகளை செய்தது.
அத்துடன் சர்வதேச நாடுகளின் போர் கப்பல்கள் இலங்கையை வந்தடைவதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதனை எவ்வாறு புதிய அரசாங்கம் கையாள போகின்றது என்பது ஒரு கேள்வியாகவுள்ளது.
எனவே,
பெரிய வல்லரசுகளின் போட்டிக்குள்ளும், முரண்பாடுகளுக்குள்ளும் சிக்காமல் இருக்க வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளதாக யாழ் பல்கலை சிரேஸ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காதர் தெரிவித்துள்ளார்.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….
https://www.youtube.com/embed/BRreLvv554M