முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண் வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சி – 54 இடங்களில் குறைந்த எடையிலான பாண் சிக்கியது

நாடு முழுவதும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளில், 54 இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைந்த எடையிலான பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு உரிய எடையில் பாண் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், செப்டம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெதுப்பகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்போது, 54 இடங்களில் பாணின் எடை தொடர்பான விபரங்கள் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், குறைந்த எடையிலான பாண்கள் விற்பனை செய்யப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், 76 கடைகள் மற்றும் வெதுப்பகங்களில் பாணின் எடை தொடர்பான விபரங்கள் முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, 65 இடங்களில் பாணின் விலை தொடர்பான தகவல்களும் முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த எடையிலான பாண்களை தயாரித்து விநியோகிக்கும் வெதுப்பகங்களை அடையாளம் காணும் வகையில், சில்லறை விற்பனை நிலையங்களைத் தாண்டி விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 81 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, முழுமையான ஒரு பாணின் எடை 450 கிராமாகவும், அரைப் பாணின் எடை 225 கிராமாகவும் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாண் விற்பனை தொடர்பான சோதனைகள், வெதுப்பக முற்றுகைகள் மற்றும் விநியோகச் சங்கிலி விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

பாணின் எடை, விலை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/shock-for-people-buying-bread–low-weight-bread-was-found-in-54-places-1789019878

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.