கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் 96 வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள சில வீடமைப்புத் திட்டங்களுக்குப் பதிலாகப் புதிய வீடமைப்புத் திட்டங்களைக் நிர்மாணிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

