முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காற்சட்டையில் ‘குஷ்’ போதைப்பொருள் கடத்தல்: கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர் நேற்று (12) மாலை தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘பசுமை வழி’ ஊடாக சுங்கப் பரிசோதனைகளின்றி வெளியேற முயன்றபோதே, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, 668 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மூன்று பொதிகளாகப் பொதி செய்யப்பட்டு அவரது காற்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/khush-drug-trafficking-in-stone-bag-trader-arrested-in-kattunayakkavil-1789279898

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்