முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு–கண்டி பிரதான வீதியில் அதிகரிக்கும் நிலச்சரிவு அபாயம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

கீழ் கடுகன்னாவைப் பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் 96 மற்றும் 99ஆவது கிலோமீட்டர்களுக்கு இடைப்பட்ட பகுதி நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள நிலச்சரிவு அபாய மண்டல வரைபடங்கள், அப்பகுதியில் முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பகுதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 101.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து (AIIB) பெறப்படும் 80 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் உதவியும், இலங்கை அரசாங்கத்தின் 21.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் அடங்குகின்றன.

திட்டத்தின் மூலம் குறித்த பகுதியில் நிலச்சரிவு அபாயத்தைத் தணித்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/increasing-risk-of-landslides-on-colombokandy-main-road–actions-taken-1789295800

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்